இன்று 15/01/2020 பொறியியல் சார்ந்த சில அறிவுரைகள்.

சாதாரண கூரை வீடுகளில் சுவர்களில் ஏற்படும் வெடிப்புக்களை தவிர்ப்பது எப்படி?

நாம் அன்றாட வாழ்கையில் பணம் சேகரித்து கஸ்ட்டப்பட்டு உழைத்து நமக்கு அல்லது நமது பிள்ளைகளுக்கு வீடுகளை நம் பொருளாதார நிலையின் படி அமைக்க திட்டமிடுகின்றோம். அத்தோடு அந்த வீடு நீடிய காலம் இருக்கவேண்டும் என்பதை அணைவரும் கருத்தில் கொள்வது சாதாரணமான ஒன்று.


அனேகமான சாதாரண கூரை வீடுகள் சுவர்கள் ஒரு இரு வருடங்களுக்கு பிறகு அல்லது முதல் செங்குத்து வெடிப்புக்கள் சரிந்த வெடிப்புக்கள் சமாந்தற வெடிப்புக்கள் என பல வெடிப்புக்கள் ஏற்படுகின்றன. அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு உண்டு
01. குறிப்பிட்ட நிலத்தின் தன்மை
02. அத்திவாரத்தின் தன்மை

நம் இவற்றை சற்று பார்ப்போம் எப்படி அமைத்து இந்த வெடிப்புக்கை தவிர்ப்பது என்று
அடித்தளம் இடும் போது அந்த நிலத்தை உங்கள் அனுபவத்தால் அடையாளம் கண்டு எவ்வளவு ஆழத்தில் கடின தரை தென்படுகின்றன என்பதை அடையாளம் கண்டுகொள்ளவும். முடியாவிட்டால் ஒரு சிவில் பொறியியலாளரிடம் ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். அத்துடன் அந்த அடித்தளத்தை நன்றாக மட்டம் செய்து ஆகக்குறைந்தது 4" அங்குலம் உயரக்கில் ஒரு தள கொங்கிரீட் இடவும் அந்த கொங்கிரீட் கலவை 1:3:6 க்கு குறையாமல் இருத்தல் வேண்டும். அத்தோடு நீங்கள் வாங்கிய கருங்கற்கள்
6"x 9" அளவை விட பெரிதாக இருக்க கூடாது.
முடியுமான அளவு அதை கவனத்தில் கொள்ளவும். குழிகளில் 6x9 கற்களை வைக்கும் போது சரியாக பக்கங்கள் அமையவைப்பதுடன் உங்கள் சீமெந்து கலவைகள் செரிமான முறையில் முழு இடைவெளிகலும் 100% இறுக்க வேண்டும். இந்த கலவை 1:5 என்ற வீதமாக இருக்கவேண்டும். அதில் சரியான கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு கடுமையான வெப்ப காலங்களில் முடியுமான அளவு குறிப்பிட்ட 6x9 கற்களை நீர் ஊற்றி வெப்பத்தை குறைத்து கொள்வது சிறந்தது. நீங்கள் சீமெந்து கலவையை நேரம் தாண்டும் வரை வைத்திருப்பது அந்த அத்திவாரத்தின் சக்தியை குறைக்க சந்தர்ப்பமாக அமையும்.

அந்த அடித்தளத்தின் பரிமாணம் ஆக குறைந்து நில பட்டத்தின் கீழ் 2'ஆழமும் 2' அகலமும் கொண்டிருத்தல் வேண்டும். மேலும் அந்த அடித்தள வேலை முடிவுற்றதன் பின் சுமார் 28 நாள்கள் பழையதா விடுங்கள் அப்படி உங்கள் காலம் அவசரமாக உள்ளது என்றால் குறிப்பிட்ட 1:5 கலவையை 1:3 என்ற வீதத்திற்கு மாற்றவும் இவைகளை முறையாக அவதானத்துடன் செய்வீர்ளேயானால் உங்கள் கட்டிட சுவர் வெடிப்பை நிரந்தரமாக தவிர்க்கலாம்.
நன்றி.
முஸம்மில் மொஹிதீன் Eng


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

No comments:

Post a Comment

Face book Us

Sri Lankan Time!!!