இன்று 15/01/2020 பொறியியல் சார்ந்த சில அறிவுரைகள்.
நாம் அன்றாட வாழ்கையில் பணம் சேகரித்து கஸ்ட்டப்பட்டு உழைத்து நமக்கு அல்லது நமது பிள்ளைகளுக்கு வீடுகளை நம் பொருளாதார நிலையின் படி அமைக்க திட்டமிடுகின்றோம். அத்தோடு அந்த வீடு நீடிய காலம் இருக்கவேண்டும் என்பதை அணைவரும் கருத்தில் கொள்வது சாதாரணமான ஒன்று.
அனேகமான சாதாரண கூரை வீடுகள் சுவர்கள் ஒரு இரு வருடங்களுக்கு பிறகு அல்லது முதல் செங்குத்து வெடிப்புக்கள் சரிந்த வெடிப்புக்கள் சமாந்தற வெடிப்புக்கள் என பல வெடிப்புக்கள் ஏற்படுகின்றன. அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு உண்டு
01. குறிப்பிட்ட நிலத்தின் தன்மை
02. அத்திவாரத்தின் தன்மை
நம் இவற்றை சற்று பார்ப்போம் எப்படி அமைத்து இந்த வெடிப்புக்கை தவிர்ப்பது என்று
அடித்தளம் இடும் போது அந்த நிலத்தை உங்கள் அனுபவத்தால் அடையாளம் கண்டு எவ்வளவு ஆழத்தில் கடின தரை தென்படுகின்றன என்பதை அடையாளம் கண்டுகொள்ளவும். முடியாவிட்டால் ஒரு சிவில் பொறியியலாளரிடம் ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். அத்துடன் அந்த அடித்தளத்தை நன்றாக மட்டம் செய்து ஆகக்குறைந்தது 4" அங்குலம் உயரக்கில் ஒரு தள கொங்கிரீட் இடவும் அந்த கொங்கிரீட் கலவை 1:3:6 க்கு குறையாமல் இருத்தல் வேண்டும். அத்தோடு நீங்கள் வாங்கிய கருங்கற்கள்
6"x 9" அளவை விட பெரிதாக இருக்க கூடாது.
முடியுமான அளவு அதை கவனத்தில் கொள்ளவும். குழிகளில் 6x9 கற்களை வைக்கும் போது சரியாக பக்கங்கள் அமையவைப்பதுடன் உங்கள் சீமெந்து கலவைகள் செரிமான முறையில் முழு இடைவெளிகலும் 100% இறுக்க வேண்டும். இந்த கலவை 1:5 என்ற வீதமாக இருக்கவேண்டும். அதில் சரியான கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு கடுமையான வெப்ப காலங்களில் முடியுமான அளவு குறிப்பிட்ட 6x9 கற்களை நீர் ஊற்றி வெப்பத்தை குறைத்து கொள்வது சிறந்தது. நீங்கள் சீமெந்து கலவையை நேரம் தாண்டும் வரை வைத்திருப்பது அந்த அத்திவாரத்தின் சக்தியை குறைக்க சந்தர்ப்பமாக அமையும்.
அந்த அடித்தளத்தின் பரிமாணம் ஆக குறைந்து நில பட்டத்தின் கீழ் 2'ஆழமும் 2' அகலமும் கொண்டிருத்தல் வேண்டும். மேலும் அந்த அடித்தள வேலை முடிவுற்றதன் பின் சுமார் 28 நாள்கள் பழையதா விடுங்கள் அப்படி உங்கள் காலம் அவசரமாக உள்ளது என்றால் குறிப்பிட்ட 1:5 கலவையை 1:3 என்ற வீதத்திற்கு மாற்றவும் இவைகளை முறையாக அவதானத்துடன் செய்வீர்ளேயானால் உங்கள் கட்டிட சுவர் வெடிப்பை நிரந்தரமாக தவிர்க்கலாம்.
நன்றி.
முஸம்மில் மொஹிதீன் Eng
ஜனாதிபதியின் முன்னெடுப்புக்களை பாராட்டக்கூடிதாக இருந்தாலும் சில இடங்களில் ஜனநாயக மீறல் தடயங்களும்
ஜனாதிபதியின் முன்னெடுப்புக்களை பாராட்டக்கூடிதாக இருந்தாலும் சில இடங்களில் ஜனநாயக மீறல் தடயங்களும் தென்படுகின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஒருத்தர் போட்டி போடுவது அவரின் ஜனநாயக சுதந்திரம் அதை மீறி அவர் 1% குறைவான வாக்குகளை எடுக்காவிட்டால் குறிப்பிட்ட வேட்பாளருக்கு 10 min தண்டப்பணம் விடுப்பது நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தை மீறும் செயலே.
இன்று தேர்தல் ஆணையத்தின் சிபாரிசு செய்த சுமார் 69 புதிய அரசியல் கட்சிகள் தயார் நிலையில் வர்த்தமாணி அறிவித்தலுக்காக காத்திருக்கின்றது. அதுமட்டுமல்ல இன்னும் சுமா 50 புதிய விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான ஆயத்த நிலையில் உள்ளார்கள் ஆகவே இப்படி வருடாவருடம் கட்சிகள் அதிகரிக்கும் நிலையில் தேர்தலில் இறங்கும் கேட்பவர்களுக்கு தண்டம் விதிப்பது என்பது ஒரு முரண்பாடான விடயம் என்றே தென்படுகின்றது.
இதை வேறு ஒரு முறையில் வேட்பாளர்களை குறைக்க திட்டமிடலாம் அதாவது ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு தேவையான தரங்களை கூட்டி கட்டுப்பணத்தை அதிகரித்து இன்னும் சில அனுபவ ரீதியான கட்டுப்பாடுகளை வரையரை செய்து ஜனநாயக ரீதியாக இந்த திட்டத்தை அமுலுக்கு கொண்டு வருவதே ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க உதவும் மாறாக ஒரு நபரை ஜனநாயகத்தை மீறி குற்றவாளியாக மாற்றுவது சிந்திக்க கூடிய விடயமே!
நன்றி.
முஸம்மில் மொஹிதீன்
ஸ்தாபக தலைவர்
தேசிய விடுதலை மக்கள் முன்னணி
அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். அரசியல் வாதிகளுக்கு சம்பந்தமில்லாத I Project
கிண்ணியா தம்பலகாமம் கந்தளாய் மற்றும் புலமோட்டை மூதூர் திருகோணமலை பிரதேசங்களில் தற்போது நடைபெற்று வரும் வீதி அபிவிருத்தி சம்பந்தமாக மக்கள் கவனமாக விளங்கிகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.
இந்த திட்டம் சுமார் மூன்று வருடங்களுக்கு முன் நல்லாட்சி வந்த உடன் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிய அபிவிருத்தி வங்கி asian development bank னால் கடனாக இலங்கையில் உள்ள உள் வீதிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த திட்டத்திற்கு ஐ திட்டம் I project என்று பெயர் சூட்டி தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைகள் ஒப்பந்தத்தின் பிரகாரம் திருகோணமலை மாவட்ட முழுதும் உள்ள உள் வீதிகள் பல பொறியியல் நிறுவனங்களுக்கு turnkey project ஆக கையளிக்கப்பட்டது. அதாவது அவர்களே அணைத்து பொறுப்புக்களையும் ஏற்று ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை அவர்களே பொறுப்பாக நின்று இவ் வேலைகளை முடிப்பார்கள் அதில் கந்தளாய் தம்பலகாமம் கிண்ணியா MAAGA எனும் நிறுவனமும் மூதூர் திருகோணமலை மற்றும் வாகரை வரை EDWARD AND CHRIST என்னும் நிறுவனமும் பொறுப்பேற்று திட்டம் நடைபெறுகின்றது.
இந்த வேலைத்திட்டம் எந்த ஒரு அரசியல் வாதிகளுக்கும் உரித்தான ஒன்று அல்ல என்பதை இங்கு மக்கள் விளங்கி கொள்ளவே இதை நான் பதிவிடுகின்றேன். நான் முக நூல் மூலமாக கண்டேன் சில பிரதேச சபை தலைவர்கள் தங்கள் அரசியல் இலாபம் கருதி இதில் நின்று போட்டோ போட்டு தாங்கள் ஆரம்பித்து வைக்கபோவதாக மக்களை மாக்களாக மாற்ற முனைகின்றனர். மக்களே ஏமாறவேண்டாம். உங்களுக்கு ஏதும் வீதி சம்பந்தமாக மாற்றங்களோ அல்லது வீதிகள் அந்த திட்டத்தில் விடுபட்டிருந்தால் உடனடியாக நீங்களே சென்று மேல் கூறப்பட்ட நிறுவன திட்ட முகாமையாளர் Project Manager இடம் சென்று முறைப்பாடு செய்து உங்கள் குறைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.
துன் எனக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக சொன்னேன்.
நன்றி.
முஸம்மில் மொஹிதீன்
ஸ்தாபக தலைவர்.
தேசிய விடுதலை மக்கள் முன்னணி.
திருகோணமலை மாவட்டத்தின் வாழ்வாதாரம் சம்பந்தமாக ஒவ்வொறு கிராமங்களுக்கும் குழுக்கள் அமைத்து அக்குழுமூலம் பிரச்சினைகள் கண்டறிந்து அதற்குறிய உடனடி நடவடிக்கை
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் திருகோணமலை மாவட்டத்தின் வாழ்வாதாரம் சம்பந்தமாக ஒவ்வொறு கிராமங்களுக்கும் குழுக்கள் அமைத்து அக்குழுமூலம் பிரச்சினைகள் கண்டறிந்து அதற்குறிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய விடுதலை மக்கள் முன்னணி உடனடி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு ஒத்துழைக்கும் சங்கங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் சமூக சேவைக்கான இயக்கங்கள் மற்றும் நலன் விரும்பிகள் போன்றோரின் உடனடி உதவிகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றது. இத்திட்டத்தில் இனமத கட்சி பேதமின்றி நம் மாவட்டத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்த அணைவரும் முன்வரவேண்டும் என கோருகின்றோம்.
நன்றி.
முஸம்மில் மொஹிதீன்
தேசிய விடுதலை மக்கள் முன்னணி.
திருகோணமலை மாவட்ட அரசியலை தேசிய நீரோட்டத்தின் பக்கம் ஈர்ப்பு செய்யும் ஒரே ஒரு கட்சி அது தேசிய விடுதலை மக்கள் முன்னணி NLPFயாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
திருகோணமலை மாவட்ட அரசியலை தேசிய நீரோட்டத்தின் பக்கம் ஈர்ப்பு செய்யும் ஒரே ஒரு கட்சி அது தேசிய விடுதலை மக்கள் முன்னணி NLPFயாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குறிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்த 2020 பொதுத் தேர்தலை திருகோணமலை மாவட்ட மக்கள் சாதி சமயம், மதம் மற்றும் அரசியல் பேதமின்றி இந்த மூவின மக்களின் முன்மாதிரி கட்சியான தேசிய விடுதலை மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும்.
நன்றி.
ஸ்தாபக தலைவர்
M.M.Muzammil mohideen
ජාතික විමුක්ති ජනතා පෙරමුණ
தேசிய விடுதலை மக்கள் முன்னணி
National liberation people front.
தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் NLPF விஞ்ஞானத்தின் சில பகுதிகள் மறைந்த மாமனிதர் MHM அஸ்ரப் அவர்களின் தேசிய ஐக்கிய முன்னணியின் NUA என்ற கட்சியின் பின்னணிலேயே அமைக்கப்பட்டது.
தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் NLPF விஞ்ஞானத்தின் சில பகுதிகள் மறைந்த மாமனிதர் MHM அஸ்ரப் அவர்களின் தேசிய ஐக்கிய முன்னணியின் NUA என்ற கட்சியின் பின்னணிலேயே அமைக்கப்பட்டது.
ஜனநாயக ரீதியில் மக்கள் உரிமைகளை வென்றெடுக்க, இலங்கை வாழ் அணைத்து இனங்களுக்கும் இடையில் சகவாழ்வை ஏற்படுத்த, மத கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பாதுக்க, நிரந்தர அபிவிருத்திகளை மேற்கொள்ள, விவசாயத்துரையை மேம்படுத்த,மீன்பிடித்தொழிலை நவீன மயப்படுத்த, கல்வியில் அதி வளர்ச்சி காண, மக்கள் மத்தியில் சமரசம் ஏற்பட, இலங்கைவாழ் மக்கள் மத்தியில் சகவாழ்வு ஏற்படுத்தி அத்தோடு இலங்கைவாழ் அணைத்து பிரஜைகளும் தத்தமது அந்தஸ்துக்கேற்ப சுய கௌரவ பிரஜைகளாக வாழ, தொழிலில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான ஏற்பாட்டின் கீழ் அதற்குறிய வழிமுறைகளை அமைப்பதற்க்கும், உள்நாட்டு கைத்தொழில்களை மேம்படுத்தி, உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை கூட்டுவதற்க்கும் மற்றும் இந்த இலங்கை திரு நாட்டை பயங்கர வாதத்திலும் இன வாதத்திலும் இருந்து முற்றுமுழுதாக பாதுகாத்து ஒரு பெறுமதி மிக்க தாய் நாடாக மாற்ற முழு முயற்சியுடன் செயல் படும் என்பதை இந்த கட்சியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியிலும் ஆரம்ப ஸ்தாபகர் என்ற ரீதியிலும் நான் இங்கு மக்களுக்கு மிக தாழ்மையுடனும் கண்ணியத்துடனும் அனைவரையும் எமது இந்த அரசியல் கட்சியில் அங்கம் வகித்து கட்சியை ஒரு மக்கள் சக்தியாக மாற்ற உதவுமாறு மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
ஸ்தாபக தலைவர்
முஸம்மில் மொஹிதீன்
ජාතික විමුක්ති ජනතා පෙරමුණ
தேசிய விடுதலை மக்கள் முன்னணி.
National liberation people front.
இப்படிக்கு ஸ்தாபக தலைவர். M.M.முஸம்மில் மொஹிதீன். தேசிய விடுதலை மக்கள் முன்னணி.
இன்று திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னால் அமைச்சர்கள் தங்கள் சேவையாக கொங்கிரிட், காபட் வீதிகளையும் கட்டிடங்களையும் மாத்திரமே மக்கள் பார்வைக்கு சேவையாக காட்டுகின்றனர். இவைகள் ஒரு அரசில் தலைமைகள் செய்யும் சேவைகளில் 10% கூட கிடையாது. சேவை என்பது மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் வாழ்வை இலகு படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதே!
வாழ்வாதாரம், பாதுகாப்பு, தொழில் வழங்கும் திட்டம், சுய தொழில் ஊக்குவிப்பு, மனித கண்ணியம் மற்றும் சுய கௌரவம் பாதுகாத்தல், காணிகள் பங்கிடும் முறைமை, புகலிடம் அமைத்தல், நாம் வாழும் பிரதேச சுத்தம், அரச திணைக்களங்களின் மக்களுக்கான காரியம் இலகு படுத்துதல், மக்களை அன்றாட வாழ்வில் சிரமம் குறைக்கும் முறைமை அறிமுகப் படுத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்றவைகளை திட்டமிட்டு மக்களுக்காக அமைத்து கொடுப்பதும் அரசியல் தலைவர்களின் சேவைகளே! மாற்றமாக பாராளுமன்றத்தில் வெறுமனே கொடுக்கும் நிதியை கொண்டு வந்து பங்கிடுவது அரசில் அல்ல இது அரசியல் தலைமைகளின் சேவையில் ஒரு துளியே!
ஆகவே மக்களுக்கு சேவைகளை சேவைகளாக மக்களிடம் வந்தடைய நீங்கள் யாவரும் எங்களை ஆதரிப்பீர்களேயானால் உங்கள் சுப வாழ்விற்கு வழி வகுக்க நாம் முன்வந்துள்ளோம். எங்களை ஆதரித்து உங்கள் அரசியல் அனுமதிகளை வழங்கவேண்டும் என மிகவும் கௌரவமாக வேண்டிக்கொள்கறோம்.
நன்றி.
இப்படிக்கு
ஸ்தாபக தலைவர்.
M.M.முஸம்மில் மொஹிதீன்.
தேசிய விடுதலை மக்கள் முன்னணி.
அஸ்ஸலாமுஅலைக்கும். அன்பார்ந்த பொது மக்களே!
இன்று திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னால் அமைச்சர்கள் தங்கள் சேவையாக கொங்கிரிட், காபட் வீதிகளையும் கட்டிடங்களையும் மாத்திரமே மக்கள் பார்வைக்கு சேவையாக காட்டுகின்றனர். இவைகள் ஒரு அரசில் தலைமைகள் செய்யும் சேவைகளில் 10% கூட கிடையாது. சேவை என்பது மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் வாழ்வை இலகு படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதே!
வாழ்வாதாரம், பாதுகாப்பு, தொழில் வழங்கும் திட்டம், சுய தொழில் ஊக்குவிப்பு, மனித கண்ணியம் மற்றும் சுய கௌரவம் பாதுகாத்தல், காணிகள் பங்கிடும் முறைமை, புகலிடம் அமைத்தல், நாம் வாழும் பிரதேச சுத்தம், அரச திணைக்களங்களின் மக்களுக்கான காரியம் இலகு படுத்துதல், மக்களை அன்றாட வாழ்வில் சிரமம் குறைக்கும் முறைமை அறிமுகப் படுத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்றவைகளை திட்டமிட்டு மக்களுக்காக அமைத்து கொடுப்பதும் அரசியல் தலைவர்களின் சேவைகளே! மாற்றமாக பாராளுமன்றத்தில் வெறுமனே கொடுக்கும் நிதியை கொண்டு வந்து பங்கிடுவது அரசில் அல்ல இது அரசியல் தலைமைகளின் சேவையில் ஒரு துளியே!
ஆகவே மக்களுக்கு சேவைகளை சேவைகளாக மக்களிடம் வந்தடைய நீங்கள் யாவரும் எங்களை ஆதரிப்பீர்களேயானால் உங்கள் சுப வாழ்விற்கு வழி வகுக்க நாம் முன்வந்துள்ளோம். எங்களை ஆதரித்து உங்கள் அரசியல் அனுமதிகளை வழங்கவேண்டும் என மிகவும் கௌரவமாக வேண்டிக்கொள்கறோம்.
நன்றி.
இப்படிக்கு
ஸ்தாபக தலைவர்.
M.M.முஸம்மில் மொஹிதீன்.
தேசிய விடுதலை மக்கள் முன்னணி.



















