அஸ்ஸலாமுஅலைக்கும். அன்பார்ந்த பொது மக்களே!

இன்று திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னால் அமைச்சர்கள் தங்கள் சேவையாக கொங்கிரிட், காபட் வீதிகளையும் கட்டிடங்களையும் மாத்திரமே மக்கள் பார்வைக்கு சேவையாக காட்டுகின்றனர். இவைகள் ஒரு அரசில் தலைமைகள் செய்யும் சேவைகளில் 10% கூட கிடையாது. சேவை என்பது மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் வாழ்வை இலகு படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதே!

வாழ்வாதாரம், பாதுகாப்பு, தொழில் வழங்கும் திட்டம், சுய தொழில் ஊக்குவிப்பு, மனித கண்ணியம் மற்றும் சுய கௌரவம் பாதுகாத்தல், காணிகள் பங்கிடும் முறைமை, புகலிடம் அமைத்தல், நாம் வாழும் பிரதேச சுத்தம், அரச திணைக்களங்களின் மக்களுக்கான காரியம் இலகு படுத்துதல், மக்களை அன்றாட வாழ்வில் சிரமம் குறைக்கும் முறைமை அறிமுகப் படுத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்றவைகளை திட்டமிட்டு மக்களுக்காக அமைத்து கொடுப்பதும் அரசியல் தலைவர்களின் சேவைகளே! மாற்றமாக பாராளுமன்றத்தில் வெறுமனே கொடுக்கும் நிதியை கொண்டு வந்து பங்கிடுவது அரசில் அல்ல இது அரசியல் தலைமைகளின் சேவையில் ஒரு துளியே!

ஆகவே மக்களுக்கு சேவைகளை சேவைகளாக மக்களிடம் வந்தடைய நீங்கள் யாவரும் எங்களை ஆதரிப்பீர்களேயானால் உங்கள் சுப வாழ்விற்கு வழி வகுக்க நாம் முன்வந்துள்ளோம். எங்களை ஆதரித்து உங்கள் அரசியல் அனுமதிகளை வழங்கவேண்டும் என மிகவும் கௌரவமாக வேண்டிக்கொள்கறோம்.
நன்றி.

இப்படிக்கு
ஸ்தாபக தலைவர்.
M.M.முஸம்மில் மொஹிதீன்.
தேசிய விடுதலை மக்கள் முன்னணி.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Face book Us

Sri Lankan Time!!!