கிண்ணியா தம்பலகாமம் கந்தளாய் மற்றும் புலமோட்டை மூதூர் திருகோணமலை பிரதேசங்களில் தற்போது நடைபெற்று வரும் வீதி அபிவிருத்தி சம்பந்தமாக மக்கள் கவனமாக விளங்கிகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.
இந்த திட்டம் சுமார் மூன்று வருடங்களுக்கு முன் நல்லாட்சி வந்த உடன் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிய அபிவிருத்தி வங்கி asian development bank னால் கடனாக இலங்கையில் உள்ள உள் வீதிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த திட்டத்திற்கு ஐ திட்டம் I project என்று பெயர் சூட்டி தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைகள் ஒப்பந்தத்தின் பிரகாரம் திருகோணமலை மாவட்ட முழுதும் உள்ள உள் வீதிகள் பல பொறியியல் நிறுவனங்களுக்கு turnkey project ஆக கையளிக்கப்பட்டது. அதாவது அவர்களே அணைத்து பொறுப்புக்களையும் ஏற்று ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை அவர்களே பொறுப்பாக நின்று இவ் வேலைகளை முடிப்பார்கள் அதில் கந்தளாய் தம்பலகாமம் கிண்ணியா MAAGA எனும் நிறுவனமும் மூதூர் திருகோணமலை மற்றும் வாகரை வரை EDWARD AND CHRIST என்னும் நிறுவனமும் பொறுப்பேற்று திட்டம் நடைபெறுகின்றது.
இந்த வேலைத்திட்டம் எந்த ஒரு அரசியல் வாதிகளுக்கும் உரித்தான ஒன்று அல்ல என்பதை இங்கு மக்கள் விளங்கி கொள்ளவே இதை நான் பதிவிடுகின்றேன். நான் முக நூல் மூலமாக கண்டேன் சில பிரதேச சபை தலைவர்கள் தங்கள் அரசியல் இலாபம் கருதி இதில் நின்று போட்டோ போட்டு தாங்கள் ஆரம்பித்து வைக்கபோவதாக மக்களை மாக்களாக மாற்ற முனைகின்றனர். மக்களே ஏமாறவேண்டாம். உங்களுக்கு ஏதும் வீதி சம்பந்தமாக மாற்றங்களோ அல்லது வீதிகள் அந்த திட்டத்தில் விடுபட்டிருந்தால் உடனடியாக நீங்களே சென்று மேல் கூறப்பட்ட நிறுவன திட்ட முகாமையாளர் Project Manager இடம் சென்று முறைப்பாடு செய்து உங்கள் குறைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.
துன் எனக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக சொன்னேன்.
நன்றி.
முஸம்மில் மொஹிதீன்
ஸ்தாபக தலைவர்.
தேசிய விடுதலை மக்கள் முன்னணி.
